வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டைன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் கதாநாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்திற்கு சொப்பண சுந்தரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் சொப்பன சுந்தரி எனும் டைட்டிலுக்கான பிரத்தியோக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். லாக்கப் படத்தை இயக்கிய இயக்குனர் எஸ் டி சார்லஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும்.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மயில் கோபி சுனில், ரெட்டி அகஸ்டின், பீஜான் தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒலி பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு படத்தொகுப்பு பயணிகளை சரத்குமார் கவனிக்கின்றார். மேலும் கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்திருக்கின்றார்கள். டார்க் காமெடி ஜானலில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செல்லில் தயாரித்துள்ளது.