Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளில் வசூல் செய்யப்பட்ட அபாரதம்….. எவ்வளவு தெரியுமா?…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் மெரினா, பேசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகள் சுகாதார அலுவலகர் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மெரினா கடற்கரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலக தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என்று 16 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை கண்காணித்து அபதாரம் விதிப்பதோடு விழிப்புணர்வு அளிக்கின்றனர். இதனையடுத்து கடந்த 15 நாட்களில் மெரினா கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.31,100 அபராதரம், பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ12,300 அபராதரம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும்பொழுது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து பிளாஸ்டிக் மாசில்லா கடற்கரையை உருவாக்க தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |