ரம்யா பாண்டியன் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் ரம்யா பாண்டியன். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தஞ்சை பெரிய கோவிலில் எடுக்கப்பட்ட தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அதற்கு பிரம்மிப்பின் பிரமாண்டம் என கேப்சன் கொடுத்திருக்கின்றார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோவில் அழகாக நீ அழகா தெரியவில்லை கண்ணே என கமெண்ட் செய்து வருகின்றார்கள்.