வட கொரியாவிடமிருந்து மில்லியன் கணக்கான ராக்கெட் மற்றும் பீரங்கி வெடிகுண்டுகளை வாங்கி குவிக்கும் பணியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கையில் போதிய தாக்குதல் உபகரணங்களை ராணுவ வீரர்களுக்கு வழங்க முடியாமல் ரஷ்யா திணறி வருகின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நாடான வட கொரியாவிடமிருந்து ரஷ்யா ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளை வாங்குவது தொடர்பான நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறையின் இந்த தகவலை முதலில் அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகள் ஆகியவற்றால் உக்ரைனில் தொடர்ந்து கடுமையான ஆயுத விநியோக பற்றாக்குறை ரஷ்யா சந்தித்து வருகின்றது. மேலும் இதனால் ரஷ்யர்கள் வருங்காலத்தில் கூடுதலாக வட கொரிய இராணுவ உபகரணங்களை வாங்கலாம் என நம்பப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் புலனாய்வு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.