Categories
மாநில செய்திகள்

சென்னை மெரினாவில்…. மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த பிளாஸ்டிக் பொருட்களினால் மண்வளம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள் குப்பைகளை கொட்டுபவர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மண்டல அளவினால் இந்த குழுவில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை கண்காணித்து அபராதம் விதிக்க பணியில் ஈடுபடும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |