இந்தியாவில் இருந்து தலைமறைவான நித்தியானந்தா ஒரு தனி தீவினை வாங்கி அதற்கு கைலாச என்று பெயரிட்டு அங்கு வசித்து வருகிறார். இவர் கைலாசா தீவில் இருந்து அடிக்கடி வீடியோ மூலம் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சீடர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்நிலையில் நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாகவும், அவர் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. ஆனால் நித்தியானந்தா தான் உயிருடன் தான் இருப்பதாகவும், என்னுடைய உடல்நிலை முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் கூறி சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய போட்டோவை வெளியிட்டு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் அதில் பதிவிட்டிருந்தார். இருப்பினும் நித்தியானந்தாவின் உடல்நிலை தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது.
அதாவது நித்தியின் உடலில் நாளுக்கு நாள் விஷத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. நித்திக்கு கைலாசா தீவில் போதுமான அளவு சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இல்லாததால் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அரசாங்கம் சிறையில் வைத்து தான் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக நித்தி சார்பில் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பப்பட்டது. அதில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தான் பண உதவி செய்வதாகவும், தனக்கு சிகிச்சை அளிப்பதற்கு அடைக்கலம் தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவிக்கும் இலங்கை அரசு நித்திக்கு உதவி செய்தால் இந்தியாவின் கோபத்திற்கு ஆளாகும் என்பதால் நித்தியும் கடிதத்திற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் கைலாசாவிற்கு சென்ற போது நித்தி ஏராளமான தங்க கட்டிகளை எடுத்துச் சென்றதாகவும், அதை தன்னுடைய அமெரிக்க நண்பர்களுடன் கொடுத்து பத்திரப்படுத்தி வைக்கும் படியும் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்க நண்பர்களோ நித்திக்கு பட்டையை போட்டு தங்க கட்டிகளை அபேஸ் செய்து விட்டனர். அதோடு இந்தியாவில் இருப்பவர்களும் தற்போது நித்யானந்தாவின் சொத்தை அபகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நித்தியானந்தாவின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது.
ஆனால் நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் ஒருவர் தன்னுடைய சொத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்வதால் தான் உடல்நலம் சரியில்லை என்று கூறி அனுதாபம் திரட்டி வருவதாக கூறியுள்ளார். இது எல்லாம் நித்தியின் நாடகமாம். அதாவது நித்தியின் ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் சீடர் ஒருவர் நித்தியின் சொத்துக்களை நடிகை ரஞ்சிதா அபகரிக்க முயற்சி செய்வதாகவும் நித்தியின் அதிகாரத்தை பறிப்பதற்காக அவருடைய உயிருக்கு உலை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டிருந்ததால் நித்தி பால்வினை நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.
அதோடு தானும் நித்தியால் பாதிக்கப்பட்டவர்களின் ஒருவர்தான் என்று கூறி வெளியில் சொல்ல முடியாத சில ஆதாரங்களையும் காட்டியுள்ளார். சொத்து பிரச்சனை முடிவடைந்தாலே நித்தியின் உண்மையான உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளிவந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும் நித்தியின் மீது பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டாலும், நடிகை ரஞ்சிதா உடனான வீடியோ வெளிவந்த பிறகு நித்தியின் லீலைகள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. நித்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் ரஞ்சிதா வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், சொத்துக்களை அபகரிக்கமுயற்சி செய்யும் திட்டத்திலும் ரஞ்சிதாவின் பெயர் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.