புதுச்சேரி காந்திநகர் பகுதியில் பூனை காணவில்லை என ஒட்டப்பட்டு இருக்கின்ற நோட்டீஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது. இது பற்றிய விசாரணை மேற்கொண்ட போது காந்திநகர் வேளாண் தோட்டத்தை சேர்ந்த ராமன் என்னும் டீ வியாபாரி ஒட்டி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்த நோட்டீஸில் குட்டூ என அழைக்கப்படும் தனது பூனை கடந்த மூன்றாம் தேதி முதல் காணவில்லை என்றும் இது பற்றி தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு தனது தொலைபேசி எண்ணையும் அவர் இணைத்து இருக்கின்றார்.
சென்னையில் நான்கு வருடங்களுக்கு முன்பு குட்டியாக இருந்த இந்த பூனையை தனது மகள் புதுச்சேரிக்கு கொண்டு வந்து வளர்த்து வருவதாகவும் கடந்த நான்கு வருடங்களாக வீட்டிற்குள்ளே தான் பூனை இருக்கும். இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி முதல் பூனையை காணவில்லை என கவலையுடன் ராமன் மற்றும் அவரது மனைவி சுகந்தி போன்ற தெரிவித்திருக்கின்றனர். இந்த வளர்ப்பு பூனை காணவில்லை என ஒட்டுமொத்த குடும்பம் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் ஒட்டி இருக்கின்ற இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.