Categories
உலக செய்திகள்

பெரு வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்… தொற்று நோயால் கடும் அவதி… அரசுக்கு கோரிக்கை…!!!!!!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்ற சிந்து மாகாணத்தில் வெள்ளம் படியாததால் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத மழை அந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மாகாணங்களை பாதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சிந்து மாகாணம் கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மண் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதால் நதிக்கரைகளில் ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். மேலும் பல இடங்களில் வெள்ளம் இன்னும் வடியாததால் குழந்தைகள் தொற்று நோய் மற்றும் சரும நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

இதில் கொசுக்கள் அதிக அளவில் பெருக்கெடுத்து இருப்பதால் மலேரியா நோய் பரவ தொடங்கி இருப்பதாக அந்த பகுதி மருத்துவர்கள் கூறி இருக்கின்றார்கள். மேலும் வாரக்கணக்கில் தேங்கி நிற்கும் மழை நீர் எதிரொலியாக பல்வேறு நோய்கள் பரவி வருவதால் பாகிஸ்தான் அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதும் சிந்து மாகாணத்தின் ஜோகி பகுதியில் மார்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் அரசின் நிவாரண உதவிகள் எட்டவில்லை என மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பாகிஸ்தான் அரசு ஹெலிகாப்டர் மூலமாக உணவுப்பொருட்களை விநியோகிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |