Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 7…!!

செப்டம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.

878 – திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார்.

1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

1191 – மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.

1228 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.[1]

1303 – பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.

1571 – நோர்போக்கின் 4-வது கோமகன் தோமசு அவார்டு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்ய சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

1652 – 15,000 ஆன் சீன விவசாயிகளும் துணை இராணுவக்குழுக்களும் சீனக் குடியரசில் இடச்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1695 – முகலாயர்களின் கஞ்ச்-இ-சவாய் கப்பலை ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் என்றி எவரி கைப்பற்றினான். இதுவே வரலாற்றில் மிகப்பெரும் கப்பல் கொள்ளை எனக் கருதப்படுகிறது. பதிலுக்கு, பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவுடனான ஆங்கிலேயர்களின் வணிகத்தைத் தடை எய்யப்போவதாக அச்சுறுத்தினார்.

1706 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: துரின் முற்றுகை முடிவடைந்தது. பிரெஞ்சுப் படைகள் வடக்கு இத்தாலியில் இருந்து விலகிக்கொண்டன.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சு பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிக்காவை ஆக்கிரமித்தது.

1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியன் உருசியப் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.

1818 – மூன்றாம் காருல் நோர்வே மன்னராக குடி சூடினார்.

1822 – முதலாம் டொம் பெத்ரோ போர்த்துகலில் இருந்து பிரேசிலின் விடுதலையை சாவோ பாவுலோவில் இருந்து அறிவித்தார்.

1860 – இத்தாலிய ஐக்கியம்: கரிபால்டி நாபொலியை அடைந்தார்.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அட்லாண்டாவில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

1870 – எசுப்பானியாவின் வீகோ அருகே பிரித்தானிய அரச கடற்படையின் காப்டன் என்ற போர்க்கப்பல் மூழ்கியதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.[2]

1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.

1921 – கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1923 – பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.

1927 – முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.

1929 – பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.

1936 – கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: தி பிளிட்ஸ்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.

1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.

1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.

1970 – யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.

1977 – கனடா, ஒண்டாரியோவில் 300-மீட்டர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.

1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.

1978 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

1978 – பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1986 – தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப்பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.

1988 – சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த ஆப்கானித்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.

1999 – ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.

2005 – எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

2011 – உருசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொசுலாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.

2017 – 2017 சியாப்பசு நிலநடுக்கம்: தெற்கு மெக்சிக்கோவில் இடமொஎற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)

1860 – அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், அமெரிக்க ஓவியர் (இ. 1961)

1867 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (இ. 1922)

1870 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1938)

1877 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)

1911 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (இ. 1986)

1925 – பி. பானுமதி, இந்திய நடிகை, பாடகி, இயக்குநர் (இ. 2005)

1928 – தொனால்டு எண்டர்சன், அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 2016)

1929 – சார்வாகன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)

1929 – பெரி. சிவனடியார், தமிழகக் கவிஞர் (இ. 2004)

1930 – எஸ். சிவநாயகம், இலங்கைப் பத்திரிகையாளர் (இ. 2010)

1934 – சுனில் கங்கோபாத்யாயா, இந்திய வங்காளக் கவிஞர் (இ. 2012)

1934 – சோசப் இடமருகு, கேரள இதழாளர், இறைமறுப்பாளர் (இ. 2006)

1951 – மம்முட்டி, மலையாள நடிகர்

1963 – நீரஜா பனோட், இந்திய விமானப் பணிப்பெண் (இ. 1986)

1984 – மாலிங்க பண்டார, இலங்கைத் துடுப்பாளர்

1985 – ராதிகா ஆப்தே, இந்தியத் திரைப்பட நடிகை

1987 – இவான் ரசேல் வூட், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்

1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)

1809 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1737)

1949 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)

1974 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)

1988 – வசுந்தரா தேவி, தமிழ்த் திரைப்பட நடிகை, பரதநாட்டியக் கலைஞர், கருநாடக இசைப் பாடகி (பி. 1917)

1997 – மொபுட்டு செசெ செக்கோ, கொங்கோவின் அரசுத்தலைவர் (பி. 1930)

2008 – நாகி நோடா, சப்பானிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1973)

2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (பிரேசில் போர்த்துகலிடம் இருந்து 1822 இல்)

Categories

Tech |