இந்தியாவின் முதல் காம்போசைட் ஃபைபர் ஹெல்மெட்டை மும்பையை தளமாக கொண்ட Tiivra என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வரி உள்பட ≈15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள ஹெல்மெட் 1,250 கிராம் எடையுடையது. ஹெல்மெட்கள் அக்ரசிவான போஸ்ச்சர்களில் ரைடிங் செய்ய விரும்புவோருக்கு ஏரோடைனமிகல் முறையில் உகந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் உலகிலேயே மிகவும் எடை குறைவான ஹெல்மெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டை சமீபத்தில் மும்பையில் nykaa நிறுவனர் பால்குனி நாயர் என்பவர் வெளியிட்டார். குறைந்த எடையை கொண்டிருப்பதால் சிறந்த பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டதாகவும் அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. இந்த ஹெல்மெட் பைக்கை விரும்பி அதிகமாக ஓட்டும் பல மக்களிடம் கேட்டு சேகரிக்கப்பட்ட விரிவான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.