மஹிந்திரா நிறுவனமானது இன்று இந்தியா சந்தையில் புது எலெக்ட்ரிக் காரான XUV400ஐ அறிமுகம் செய்தது. இந்த மஹிந்திரா காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டிருக்கும். இத்துடன் காரின் முன்புறமானது முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள், புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய ரியர் பம்ப்பர், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உள்புறம் மஹிந்திரா XUV300 மாடலில் இருந்ததை போன்ற டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 9 inch touch screen வசதி கொண்ட infotainment system, apple car play, android auto, new ac vents வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் XUV300-ஐ விட அளவில் சற்று நீளமாக இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 40 முதல் 45 kilowatt hour battery pack வழங்கப்பட்டுள்ளது. இது 140-150 hp power வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த கார் எலெக்ட்ரிக் மாடல் நெக்சான் EV மேக்ஸ்-ஐ விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.