Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்கள் திருமணத்தை ட்ரோல் செய்வதற்கான காரணம்”…. ரவீந்தர் ஓபன் டாக்…!!!!!

தங்களின் திருமணம் குறித்து இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவதற்கான காரணம் குறித்து ரவீந்தர் பேட்டியில் கூறியுள்ளார்.

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இருவரையும் இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். மேலும் தரக்குறைவாகவும் விமர்சிக்கின்றார்கள். இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ரவீந்தர் தங்களின் திருமணம் கேலி செய்யப்படுவது ஏன் என விளக்கம் அளித்து இருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் தன்னை கிண்டல் செய்யவில்லை. நான் உடல் பருமனாக இருப்பதால்தான் தன்னை கிண்டல் செய்கின்றார்கள் எனக் கூறியிருக்கின்றார். மேலும் தங்களுக்கு பிடித்து தான் திருமணம் செய்து கொண்டோம். இதில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |