Categories
தேசிய செய்திகள்

பயணிகளே…! இனி சரியான இடத்தில் ஏறாவிட்டால் சிக்கல்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி  தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது. “இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும்” என்றனர்.

குறிப்பாக இந்த கையடக்க கணினி சென்னை எழும்பூர் -மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ்வி ரயில், சென்னை எழும்பூர் -திருச்சிராப்பள்ளி இயக்கப்படும் மலைக்கோட்டை ரயில், சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர் இயக்கப்படும் சேரன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களை டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கையடக்கக் கண்ணின் மூலமாக பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும்.

காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் விவரத்தை உடனடியாக பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு அனுப்ப முடியும். இதன் மூலமாக வழியில் உள்ள ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளும் இந்த காலி இடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ரயில் புறப்பட்டு அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனை தொடங்கி பயணி பட்டியலை கையடக்க கணினி மூலமாக பயணிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.

Categories

Tech |