Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப் 7) இங்கெல்லாம் கரண்ட் கட்….. லிஸ்ட் இதோ… இதுல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை
வேட்டவலம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல், அடுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்
திருப்பூர் கோட்டம் கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூம்பு கார் , இந்திராநகர் , பல்லடம் ரோடு , வித்யாலயம் , பாரதி நகர் , குளத்துப்பாளையம் , செல்வலட்சுமி நகர் , வீர பாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள் , கருப்பக் கவுண்டன்பாளையம் , கே. ஆர். ஆர். தோட்டம் ஆகிய பகுதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மதுரை
சோழவந்தான் துணை மின் நிலையத்திற்குட்பட்ட இரும்பாடி, தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் நிலையம், சமயநல்லூர், ஊர்மெச்சிகுளம், வளர்நகர், பாத்திமா நகர், தேனூர் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர்
சின்னம்பேடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆரணி, சின்னம்பேடு, அகரம், போந்தவாக்கம், கொசவன்பேட்டை, காரணி, மங்களம், கொள்ளுமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை
திருநின்றவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருநின்றவூர், பாக்கம், புலியூர், நத்தமேடு, கசுவா, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கோவில்குப்பம், அரண்வாயில்குப்பம், புட்லுார், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்பேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, நடுக்குத்தகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை ஏற்படும்.

Categories

Tech |