உயர்நீதிமன்றம் இருநீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு இபிஎஸ் தரப்புக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். இதனிடையில் எடப்பாடி பழனிசாமி நேற்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டால், தங்களது தரப்பையும் கேட்க வேண்டும் என இபிஎஸ் முறையிட்டுள்ளார். ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முடிவுக்கு எடப்பாடிபழனிசாமி வந்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள சமயத்தில், மற்றொரு திசையில் இந்த அட்டாக்கை தொடுக்க இபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் அவர்களின் மகள் சத்தியசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதாவது, நான் பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும்போதும் போராடிக் கொண்டுதான் இருந்தேன். எதிர்கட்சியாக இருக்கும் போதும் போராடிகொண்டுதான் இருக்கிறேன். இந்நிலையில் போராட்டம் போராட்டம் என்று தாண்டி வெற்றியை பெற்றுக்கொண்டு இருக்கிறேன். அ.தி.மு.க வலிமையுடன் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.முக-வை பலபேர் விலக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மக்கள் சக்தியுள்ள இயக்கம். எவராலும் ஒரு போதும் கட்சியை பிளவுபடுத்த முடியாது என்று பேசினார்.