உக்ரேனுக்கு சென்ற 25 பிரபலங்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் உள்ளிட்ட 25 பிரபலங்கள் கடந்த சில நாட்களாக உக்ரைன் அதிபரை சந்தித்து வருகின்றனர். இதனால் அந்த 25 பிரபலங்களும் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய மக்களுக்கு எதிராக அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் பல வகைகளில் தடைகளை விதித்து வருகிறார். இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட 25 பிரபலங்கள் உக்ரைனுக்கு சென்று அதிபரை சந்தித்துள்ளனர். இதனால் அவர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளது. இந்நிலையில் உக்கிரேனுக்கு சென்ற பிரபலங்களை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆபத்தான நிலையிலும் எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.