Categories
மாநில செய்திகள்

ஆபீஸ் டைம்ல ‘சிகரெட்’ பிடித்த வட்டார ஆட்சி அலுவலர்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

மதுரை மாவட்ட திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில்  சௌந்தரராஜன் வட்டார ஆட்சி அலுவலராக  கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் புகைப்பிடிதுள்ளார்.  இதனை புகைப்பட ஆதாரத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அந்த புகார் மனுவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சௌந்தரராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் பணி நேரத்தின் போது ஒழுங்கின நடவடிக்கை ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தரராஜனை பணியிட நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் சேகர் அனீஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணியிட நீக்கம் செய்யப்பட்ட சௌந்தரராஜன் மதுரை மாவட்டத்தை விட்டு அனுமதியின்று வேறு மாவட்டங்கள் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |