Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல்….. இந்தியாவில் எந்த நகரங்கள் தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!!

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு நாடுகளிலும் மிக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

வருடத்திற்கு 123 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் இழக்கிறது மும்பை. மற்ற நகரங்களில் ஒப்பிடும்போது மும்பை 53 சதவீதம் அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் போக்குவரத்து நெரிசலில் ஆண்டுதோறும் 142 மணி நேரத்தை இழக்கும் உலகின் மிக நெரிசலான நகரமாகும்.

உலகின் மிகவும் நேரிசலான நகரங்களின் விவரங்கள்:

இஸ்தான்புல் – போக்குவரத்தில் 142 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை – 62%

பொகோடா – 126 வருடாந்தர போக்குவரத்து நேரம்; நெரிசல் நிலை -55%

மும்பை- 121 வருட போக்குவரத்து மணிநேரம்; நெரிசல் நிலை- 53%

புக்கரெஸ்ட் – போக்குவரத்தில் 115 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை – 50%

பெங்களூரு – 110 வருட போக்குவரத்து மணிநேரம்; நெரிசல் நிலை- 48%

புது தில்லி – 110 வருட போக்குவரத்து மணிநேரம்; நெரிசல் நிலை- 48%

Lodz – போக்குவரத்தில் 103 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை – 45%

டெல் அவிவ் – போக்குவரத்து நெரிசலில் 98 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை- 43%

டோக்கியோ- போக்குவரத்து நெரிசலில் 98 வருடாந்த மணிநேரம்; நெரிசல் நிலை- 43%

Categories

Tech |