ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்த சூப்பர்-4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதிகொணடது. அப்போது டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து களம் இறங்கிய விராட்கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதன்பின் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் இறங்கிய ரோகித்சர்மா 72 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனிடையில் சூர்யகுமார் 34 ரன்னில் அவுட் ஆகினார்.
பாண்ட்யா மற்றும் ரிஷப்பண்ட் 17 ரன்னிலும், ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்துகுவித்தது. அதன்பின் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசாங்கா 52 ரன்னும், மெண்டிஸ் 57 ரன்னும் எடுத்து குவித்தனர். அத்துடன் பானுகா ராஜபக்சே 25ரன் மற்றும் கேப்டன் தசன் சனாகா 33 ரன் அடித்து களத்தில் இருந்தனர். இலங்கை அணியானது 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. பிறகு அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.