Categories
தேசிய செய்திகள் வானிலை

HEAVY ALERT : 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. வானிலை எச்சரிக்கை….!!!!

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பருவ மழையால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று கேரளாவில் நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. கேரளாவில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |