ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததாகவே கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ரசிகர்கள் பலரும் வி மிஷ் யூ டோனி என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் இலங்கைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் 5-வது பந்து தான். இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 6 ரன்களில் அவுட் ஆகினார். அதன்பின் களம் இறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆகினார். இந்த மேட்சில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 72 ரன்கள் எடுத்தார்.
சூரியகுமார் யாதவ் 32 ரன்களும், ரிஷப் பண்ட் 17 ரன்களும், ஹூடா 3 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த மேட்ச்சில் இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ரவி பிஷ்னோய் வீசிய 17. 3 ஓவரில் ஆஷிப் அலி பந்தை வேகமாக அடிக்க முயற்சி செய்தபோது பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு பின்னே கேட்சாக மாறியது. ஆனால் அர்ஷிப் சிங் சுலபமான அந்த கேட்சை தவறவிட்டார். இது இந்தியா தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் எதிரணியினர் பைன் ரன் ஓட முற்பட்டபோது தோனி அபாரமாக விளையாடி அதை தடுத்து இருக்கிறார். இது ஆட்டத்தின் முடிவை மாற்றி இந்தியாவின் வெற்றிக்கு உதவி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகப் போட்டியில் வங்கதேசம் 1 பந்துகளில் 2 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அப்போது எதிரணியினர் பைன் ரன் ஓட முற்பட்டபோது ஸ்டெம்புகளை தகர்த்து தோனி வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்திருப்பார். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ரசிகர்கள் தோனியை போன்று விளையாடி இருந்தால் கண்டிப்பாக இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்று கூறி வி மிஸ் யூ தோனி என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.