Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!!

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், சாலை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களில் இந்திய மக்களையோ அல்லது சரக்குகளையோ ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானங்கள் மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கட்டாயமான முறையில் கடைபிடிக்க வேண்டும். அதனை தொடர்ந்து வெளிநாடுகளில் பதிவு மேற்கொள்ளப்பட்ட வாகனங்கள் தங்களுக்குரிய ஆர்.சி புத்தகம், ஓட்டுநர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, உரிய காப்பீடு பாலிசி, மாசு கட்டுப்பாடு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணங்களில் ஆங்கில மொழி தவிர பிற மொழிகளில் இருப்பின் அவற்றை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |