Categories
மாநில செய்திகள்

NO ENTRY-யில் வாகனம் வாகனம் ஓட்டக்கூடாது…. மீறினால் அபராதம்…. காவல்துறையினரின் கடும் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இ-செலான் திட்ட முறையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கியூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுகிறது.

இதில் குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், செல்போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சாலையில் அதிவேகமாக செல்லுதல், சிக்னலில் நிற்காமல் செல்லுதல் போன்ற 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அதிக அளவில் வழக்குகள் பதியப்படுகிறது. இதேபோன்று நோ என்ட்ரியில் வாகனங்கள் ஓட்டுவதாலும் அதிக அளவில் விபத்துகள் நடப்பது தற்போது போக்குவரத்து காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

இப்படி நோ என்ட்ரியில் வாகன ஓட்டுபவர்களுக்கு இதுவரை 100 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 1100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 1300 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் நோ என்ட்ரியில் வாகன ஓட்டிகள் யாரும் செல்லக்கூடாது எனவும் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |