ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிறுவனம் தனது 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பயனாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் ஆறு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஆறு நாட்களுக்கு தினமும் 10 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்க உள்ளது. அந்த வகையில் நேற்று இருந்து செப்டம்பர் 11 வரை ரூ. 299க்கும் மேற்பட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஆனால் தமிழக பயனாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தாது என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக பயணங்கள் கோவத்துடன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.