நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாணவ-மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை https://neet.nta.nic.in என்ற இணையதள பக்கத்திற்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதளத்திற்கு சென்ற பிறகு மாணவர்கள் முதலில், நீட் யுஜி 2022-க்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் தேவையான விவரங்களை அதில் பதிவேற்றம் செய்துவிட்டு சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் முடிவு திரையில் தோன்றும். இதை மாணவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.