Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு…. நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்…!!!!!

தமிழகத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2 ம் தேதி தொடங்கி மே 13ஆம் தேதி முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் ஆறு லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதில் 12ஆம் வகுப்பு மட்டும் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள மாணவர்களில் சிலர் தேர்வில் பங்கேற்கவில்லை. சிலர் தேர்ச்சி பெறவில்லை இதனை அடுத்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் துணை தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவு கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அப்போது மாணவர்கள் www.dge.tn.gov.in என்னும் இளையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. துணை தேர்வில் தகுதியான மதிப்பெண் வழங்கவில்லை என கருதுபவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் வாயிலாக ஆகஸ்ட் 24, 25ஆம் தேதிகளில் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களின் விடைத்தாள் நகல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கின்றவர்கள் மேலும் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டு விண்ணப்பிக்க விரும்பினால் செப்டம்பர் 8, 9, 10 போன்ற தேதிகளில் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |