விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பங்கேற்றனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணையத்தில் மாறி மாறி திருமண புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
இந்நிலையில் மகாலட்சுமி டூயட் படத்தில் பிரபுக்காக எழுதப்பட்ட கத்தரிக்காய் கத்தரிக்காய் குண்டு கத்திரிக்காய் பாடலை ரவீந்தர் சந்திரசேகரன் பார்த்து பாடி இருக்கிறார். இதனை இதனை பார்த்தவர்கள் ரவீந்திருக்கு இது தேவை தான் என்று கமெண்ட் அடித்து உள்ளனர். மேலும் தான் குண்டாகவும் மகாலட்சுமி அழகாகவும் இருப்பதால்தான் இந்த திருமணத்தை அனைவரும் விமர்சிப்பதாக ரவீந்தர் தெரிவித்துள்ளார். ஆனால் ரவீந்திரனின் சைஸ் முக்கியமில்லை என்று மகாலட்சுமி கூறுகிறார். இதனையடுத்து ரவீந்தருக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்ததில் இருந்தே சமூக வலைதளங்கள் அவர்களை பற்றி தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். மேலூம் ரவீந்தரும், மகாலட்சுமியும் instagram-யில் செல்லமாக பேசிக்கொள்வது பற்றி விமர்சிக்கப்படுகிறது. அதிலும் மகா தன் நெஞ்சின் மீது படுத்து தூங்கியதை புகைப்படம் எடுத்து ரவீந்தர் வெளியிட்டது பலரின் கவனத்தை ஈர்த்து விட்டது.