இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி whatsapp வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்பிஐ இன் whatsapp சேவை தொடங்கப்பட்டதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் இனி whatsapp பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்ற பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். இனி வங்கி சேவைகளை பெற வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. எஸ்பிஐ whatsapp வங்கி சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவையில் பதிவு செய்யும் வழி:
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து WAREG A/C எண்ணை (9172089XXX) SMS அனுப்பவும். உங்கள் பதிவு முடிந்ததும், நீங்கள் SBI இன் WhatsApp வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.
பதிவுசெய்ததும், +919022690226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று அனுப்பவும் அல்லது வாட்ஸ்அப்பில் ‘அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் வெற்றிகரமாக எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைக்காகப் பதிவு செய்துள்ளீர்கள்’ என்று வரும் மெசேஜூக்கு பதிலளிக்கவும்.
பதிலளித்தவுடன், இந்த பதிலைப் பெறுவீர்கள், ‘அன்புள்ள வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம். இதன் பிறகு நீங்கள் கணக்கு இருப்பு தொகை, சிறு அறிக்கை ஆகியவற்றை வாட்ஸ் அப் மூலமே தெரிந்து கொள்ளலாம்” என்று மெசேஜ் வரும்.
இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவலையும் பெற்றுக் கொள்ளலாம்.