50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும், அன்னை சத்யா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.
இதனால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனை அடுத்து நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பகுதியில் கழிவுநீருடன் மழை நீர் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.