சட்ட விரோதமாக வேனில் அகதிகளை ஏற்றி வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஏ2 நெடுஞ்சாலையில் இத்தாலி பதிவு எண் கொண்ட பார்சல் வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த சோதனையில் வேனில் சட்டவிரோதமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 அகதிகளை அழைத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் வேனில் இருந்த 23 அகதிகளையும் மீட்டனர். மேலும் வேனை ஒட்டி வந்த காம்பியாவை சேர்ந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.