Categories
உலக செய்திகள்

நியூயார்க் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு… வாழ்த்து தெரிவிக்கும் அமெரிக்க பார் அசோசியேசன்…!!!!!!

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியன் ஜனாதிபதி ஜோபேடன் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருள் சுப்பிரமணியன் எனும் சிறப்பை இவர் பெறுகின்றார். இந்த நிலையில் 2006 முதல் 2007 ஆம் வருடம் வரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் சட்டை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய பசுபிக் அமெரிக்கப் பார் அசோசியேஷன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |