Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்”….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை சரி செய்வதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நடத்தப்படும் குறை தீர்ப்பு செப்டம்பர் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு என்பது ஏழை, எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை. இதை வைத்து நியாய விலை கடைகளில் இலவசமாகவும் மழிவு விலையிலும் உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த ரேஷன் அட்டைகளில் பெயர் நீக்குதல், சேர்த்தல், மொபைல் எண் மாற்றுதல் போன்ற பல திருத்தங்கள் இருக்கும்.

அதை சரி செய்ய தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைய தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் நடத்தப்படுகின்றது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான முகாம் வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல் 1  மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட சேவைகளை செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்றும் இந்த கூட்டத்தில் வழங்கப்படுகின்றது.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள் மற்றும் சேவைகளின் குறைபாடுகள் குறித்த புகார் இருப்பின் பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை தீர்த்துவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |