Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள்?….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கக் கூடிய வகையில் ‘ஃபேன் இந்தியா’ திட்டத்தை கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. தற்போது ஃபேன் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ‘ஃபேம் இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நாடு முழுவதும் 2877 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலைகள் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாரிய இடங்களில் எங்கு சார்ஜிங் அமைப்பது குறித்து இட தேர்வு நடந்து வருகிறது. மேலும் மின்சார வாகனங்கள் சார்ஜிங் செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யவும் திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |