இலங்கைக்கு எதிரான கடைசி ஓவரில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கேப்டனிடம் ஆலோசனை கூற முயன்றபோது, ரோஹித் சர்மா மூஞ்சை திருப்பிக்கொண்டு கண்டுகொள்ளாமல் சென்டர் வீடியோ ட்விட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
கடந்த மூன்று-நான்கு நாட்களில் 23 வயதான அர்ஷ்தீப் சிங் மிகவும் கஷ்டப்பட்டார். ஆம், போட்டியின் 18வது ஓவரில் பாகிஸ்தானின் ஆசிப் அலியின் கேட்சை கைவிட்டதற்காக 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்பட்டார்.இதற்கு அடுத்த ஓவரில் ஆசிஃப் கிட்டத்தட்ட போட்டியை முடித்து விட்டார். எனினும் அர்ஷ்தீப் மீண்டும் வந்து கடைசி ஓவரில் பாகிஸ்தானை ஆட்டமிழக்க நம்பமுடியாத திறமையைக் காட்டினார். மேலும் இந்தியாவுக்கான போட்டியை கிட்டத்தட்ட வென்றார் என்றே சொல்லலாம்.. ஆனாலும் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. இரண்டு இரவுகளுக்குப் பிறகு, மீண்டும் கடைசி ஓவரில் 7 ரன்களை கட்டுப்படுத்த அவர் மீண்டும் ஒருமுறை பந்து வீசினார். இம்முறை எதிரணி இலங்கை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப் போலவே, அனுபவமிக்க புவனேஷ்வர் குமார் 19 வது ஓவரில் ரன்களை (14) கசியவிட்டார். கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் போராடினார் என்பது அனைவருக்கும் தெரியும். அர்ஷ்தீப் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா மற்றும் பானுகா ராஜபக்சே ஆகியோரை சமாளிக்க வேண்டியிருந்தது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் தொடர்ந்து 4 யார்க்கர்களை விளாசினார், இதன் விளைவாக 5 ரன்கள் கிடைத்தது, பின்னர் 5ஆவது லெந்த் பந்தை சனாக்கா அடிக்க முயன்றார், ஆனால் அந்த பந்து பின்னால் செல்ல இந்திய அணியின் கீப்பர் ரிஷப் பண்ட் பிடித்து ஸ்டெம்பை ஏறிய அது மிஸ் ஆன நிலையில், எதிர்முனையில் நின்ற அர்ஷ்தீப் சிங்கும் ஸ்டம்பைத் தவறவிட்டார். இதனால் இலங்கை அணி 2 ரன்கள் ஓடி வென்றது.
இதற்கிடையே முன்னதாக அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீசுவதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பீல்டர் நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை சொல்ல முயன்றபோது, கண்டுகொள்ளாமல் ரோகித் முகத்தை திருப்புகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டரில் தீயாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனுபவமில்லாத இளம்வீரர் இக்கட்டான நிலையில் ஆலோசனை கேட்கும்போது இப்படி மூஞ்சில் அடிப்பதுபோல பதில் சொல்லாமல் செல்லலாமா என்று ரோஹித்தை திட்டி தீர்த்து வருகிறார்கள்…
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் அந்த கேட்சை விட்டதன் காரணமாகஅதை மனதில் வைத்துக் கொண்டு ரோகித் இப்படி நடந்து கொள்கிறாரா என்று ரசிகர்கள் வெளுத்து வாங்குகிறார்கள்.. அப்படி பார்த்தால் அந்த போட்டியில் நீங்களும் தான் மோசமாக ஆடினீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சாடுகிறார்கள.. என்னதான் இக்கட்டான நிலைமையில் வீரர்கள் தவறு செய்தாலும் கோபத்தை காட்டாமல் ஆதரவு கொடுப்பதே ஒரு கேப்டனின் கடமை என்பதே தோனியின் பண்பு.. ஐபிஎல் தொடரில் தோனியை விடவும் 5 கோப்பைகள் வென்று இருந்தாலும், இந்த தலைமை பண்பை நீங்கள் தோனியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் விளாசி தள்ளுகின்றனர்.
ஒரு ரசிகர், சில நொடிகளில் ஷிட்மேன் ஹிட்மேன் ஆக மாறுகிறார்??? இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தாலும் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசினார். இந்த கிளிப்பில் ரோஹித் சர்மா உண்மையில் அவரை புறக்கணித்தது போல் தெரிகிறது. இது ஒரு கேப்டனின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்று சாடினார்..
இதேபோல மற்றொரு ரசிகர் ரோஹித் ஷர்மாவின் நடத்தை.. ஏன் இரண்டு பெரிய ஆட்டங்களில் தோற்றார் என்பதற்கு பதில் இந்த வீடியோ தான். எனது முழு வாழ்நாளில் எந்த ஒரு இந்திய கேப்டனிடமும் இதுபோன்ற நடத்தையை நான் பார்த்ததில்லை…… 2017ல் MSD ஏன் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கோலியின் பெயரை பரிந்துரைத்தார் என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Hitman to Shitman in matter of seconds???
Arshdeep Singh really bowled well in last over in both the games against Sri Lanka and Pakistan though they lost. It looks like Rohit Sharma really neglected him in this clip. That’s unacceptable behavior from a captain.🤮🤮#AsiaCupT20 pic.twitter.com/hfCgzXirWQ
— Lahiru Abeysinghe (@lahiruabey_) September 7, 2022
நேற்று நடந்த இந்த சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 173 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உடன் 72 (41) ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 174 ரன்கள் எடுத்து வென்றது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Anvi_Shylla/status/1567435130570162176