விஜய்யின் சிறுவயது ஆசை பற்றி அவரின் தாயார் சோபா சந்திரசேகர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். வாரிசு திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் தளபதி 67 படபிடிப்பானது டிசம்பர் மாதம் தொடங்க இருக்கின்றது.
இந்த நிலையில் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர் அண்மையில் விஜய்யின் சிறு வயது ஆசைய குறித்து பேசி இருக்கின்றார். அவர் பேசியுள்ளதாவது, விஜய்க்கு சிறுவயதில் பைலட்டாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும் நாளுக்கு நாள் அது தீவிரமாக, நாங்கள் இருவரும் விஜய் பைலட் ஆவதில் சற்று தயக்கம் காட்டினோம். பின்னர் நாளடைவில் அந்த ஆசை மறைய விஜய்க்கு சினிமா மீதான காதல் பற்றிக் கொண்டது. பின் தனது 18-வது வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.