சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 1/2 கோடி பொருட்கள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தார்கள்.
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருக்கும் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து தனியார் மருந்து நிறுவனம் மூலம் சென்ற ஆகஸ்ட் 18ம் தேதி அன்று 14 ஆயிரத்து நானூறு கிலோ மருந்து பொருட்களை கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நூதன முறையில் கண்டனர் லாரியில் இருந்த மருந்து பொருட்கள் திருடப்பட்டதாக நிறுவனம் புகார் அளித்ததன் பேரில் துறைமுகத்திற்கு சென்று தனிபடை போலீஸ் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், இளமாறன், கார்த்திக், முனியாண்டி சொல்லிட்ட 4 பேரை கைது செய்தார்கள். ராஜேஷ், சங்கர், சிவபாலன் உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சம்பவத்தில் ஏழு பேர் கொண்ட கும்பல், லாரி டிரைவர்களின் உதவியுடன் பொருட்களை திருடி பதுக்கி வைத்து பணம் சம்பாதித்தது தெரிந்தது. இந்த கும்பல் கண்டெய்னர்களில் சீலை அகற்றாமல் மேலே மற்றும் கீழே இருக்கும் அச்சாணிகளை கழற்றிவிட்டு பொருட்களை நூதன முறையில் திருடியுள்ளனர். மேலும் டிரைவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை இந்த கும்பல் பணம் கொடுத்திருக்கின்றது. இந்த கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை போலீஸ் கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.