டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஆம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி வரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறார். அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் டெல்லியில் இந்த வருடமும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ் டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு மற்றும் வருவாய் துறையிடம் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படுகிறது. டெல்லியில் கடந்த வருடத்தைப் போல மாசு அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்திக்கு சேமிப்பு விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
Categories