தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகமானது வங்க மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, கன்னட மொழி இருக்கை, இந்தி மொழியாக்க பிரிவு, உருது பிரிவு, இந்தி பிரிவு மற்றும் தமிழ் பிரிவு போன்ற அமைப்புகளை கொண்டு செயல்படுகிறது. இதில் உள்ள தமிழ் பிரிவை சமூகவியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்று இயல், தமிழ் மற்றும் திராவிட மொழியில் ஆய்வு என மூவகையாக பிரித்து தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்து.
இந்த தமிழ் இலக்கியவில் துறை உருவாவதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசு. இந்த தமிழ் இலக்கிய துறை JNU தமிழியல் என்ற பெயரில் ஆய்வு நடத்தி 1 வருடத்திற்கு 2 முறை 100 பக்க அளவில் இதழ் வெளியிடுதல், தரமான நூல்களை வெளியிடுதல், மற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், தமிழ் ஆசிரியர்களுக்கு ஆய்வு பயிலரங்கம், முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி, விருந்து நிலை பேராசிரியர் வழி ஆய்வு பெருந்திட்டம், வல்லுநர் வழி மொழியாக்கம், முதுகலை தமிழ் இலக்கியப் படிப்பு, ஒப்பாய்வு போன்ற பணிகளை மேற்கொள்ளும். இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.