Categories
மாநில செய்திகள்

HOTEL MANAGEMENT AND CATERING THECNOLOGY: 100% வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னையில் உள்ள தரமணியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தன்னாட்சி நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் உலக அளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தரவரிசை பட்டியலில் உள்ள 100 நிறுவனங்களில் 14-வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவ-மாணவிகளுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்பு படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 1 1/2 வருடங்கள் உணவு தயாரித்தல், பதனிடுதல், கைவினைஞர் படிப்புகளை படிக்கலாம்.

இதேப்போன்று 12-ம்‌ வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1 1/2 முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பும், பி.எஸ்.சி 3 வருட‌ முழு நேர படிப்பிலும்‌ சேர்ந்து கொள்ளலாம். இந்த படிக்கான‌ கட்டணம் தாட்கோவால் கல்வி கடனாக வழங்கப்படும். இதைத்தொடர்ந்து படிப்பு முடிந்த பிறகு உயர் தர‌ உணவகங்கள், சேவை நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், நட்சத்திர‌ விடுதிகள் போன்றவகைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இங்கு ஆரம்ப கால‌ ஊதியமாக‌ 25,000‌ முதல் 30,000 ரூபாயும், திறமையைப் பொறுத்து 50,000 முதல் 70,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும்‌ படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 ஆகும்.

Categories

Tech |