ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் வளமாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கோரிப்பாளையம், யானைக்கால், மதிச்சியம், தரைப்பாலம், தென்கரை, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.