Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் 50 MLAக்கள், 2 MPக்கள் திமுகவில்…. அணுகுண்டை போட்ட ஆர்.எஸ்.பாரதி ….. புதிய பரபரப்பு….!!!!

திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக நேற்று  மதியம் இபிஎஸ் குண்டை போட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் அதிமுகவின் 50 எம் எல் ஏக்கள், இரண்டு எம்பிக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர் எங்களுடன் பேசுகின்றனர் என கூறிய திமுகவின் ஆர் எஸ் பாரதி,இபிஎஸ் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதிமுக எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிடுகிறோம் என பதிலுக்கு அதிர்ச்சி அணுகுண்டை போட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ் பாரதி, அதிமுகவின் 50 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுகவுடன் பேசுகிறார்கள். உண்மையான திராவிட இயக்கம் திமுகதான். அதனால் அதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும். இபிஎஸ் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதிமுக எம்எல்ஏக்கள் பட்டியலைவெளியிடுவோம் என அவர் கூறியுள்ளது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Categories

Tech |