Categories
மாநில செய்திகள்

அடடேய் சூப்பர்…. இன்று முதல் இயக்கப்பட்ட மலை ரயில்…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி….!!!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை  ரயில்  இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கல்லாறு- ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு  180 சுற்றுலா பயணிகளுடன்  ரயில்  சென்றது. ஆனால் பாறாங்கற்கள்  உருண்டு விழுந்து சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளம் மற்றும் ராக் பார்கள் உடைந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால்  ரயில்  பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் கடந்த 2  நாட்களாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறினர். மேலும் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டவாள பாதையில் விழுந்து கிடந்த பாறைகளை கம்ப்ரகள் மூலம் துளையிட்டு  வெடித்த பின்னர் சிதறிய கற்களை அகற்றி ரயில் பாதையை மூடி இருந்த மண்ணை அகற்றினர். இந்த பணியானது நேற்று மாலை 6.30 மணிக்கு முடிவு அடைந்தது. இதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று வழக்கம்போல் மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |