நாடு முழுவதும் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தடுப்பதற்காக மத்திய அரசை கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்கி அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது. வங்கி கடன் வாங்க வேண்டும் என நினைத்தாலும் அலைய வேண்டிய அவசியமில்லை.
விவசாயிகள் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மிகச்சிறந்ததாக இருக்கும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி பிசான் கிரெடிட் கார்டு பெற விவசாயிகள், குத்தகை விவசாயிகள், வாய் வலி குத்தகைதாரர்கள் மற்றும் விவசாய சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இதன் மூலமாக விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொள்ளலாம் எனவும் விவசாயிகளுக்கு மூன்று சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தகுதியான பயிர்களுக்கு பயிர் காப்பீடு வசதியும் பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தில் கிடைக்கும். மேலும் கிசான் கிரெடிட் கார்டு மூலமாக விதைகள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களை விவசாயிகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது.இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.