தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக 13 லட்சத்து 12 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கார்டுதாரர்கள் பொருள்கள் வாங்காதது ஏன்? அதைப்போலிகார்டுகளா?உள்ளிட்டவை குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் விசாரித்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை தர உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 13,11,716 குடும்ப அட்டைகளுக்கு அண்மைக் காலமாகப் பொருட்கள் வாங்கப்படவில்லை. இந்த அட்டைகளின் விவரங்களை குறித்து உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் காடுகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.