தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம்:
வேட்டவலம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம், கல்லாயிசொரத்தூர், ஆவூர், வைப்பர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், பொன்னமேடு, ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மலையரசன்குப்பம், மழவந்தாங்கல், அடுக்கம் மற்றும் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் என மின்வாரிய செயற்பொறியாளர் (கிழக்கு) மு.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம்:
சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் வியாழக்கிழமை (செப்.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளா் ச.ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளாா். மின்தடைபடும் பகுதிகள்: கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, சின்னஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, எல்லையூா், ராமராஜபுரம், கூழாண்டிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கோட்டம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம்.