குழந்தை இறந்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தக்குட்டை பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வீரசின்னம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் ஒரு வருடத்திலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் வீரசின்னம்மாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபாலன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் 2 நாட்களில் இறந்து விட்டது.
இதனால் கணவன்-மனைவி இருவரும் வேதனையில் இருந்து வந்துள்ளனர். மேலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வீரசின்னம்மாள் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்து எடுத்துக் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலனும் களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீரசின்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பூபாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த உடுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.