கோவை மாநகராட்சியில் கழிவறையொன்றில் ஒரே அறைக்குள் இரு டாய்லெட் கோப்பைகளை அமைத்துள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் சார்பில் அம்மன் குளம் பகுதியில் கட்டப்பட்ட கழிவறையில் இரு டாய்லெட் கோப்பைகளை ஒரே அறைக்குள் வைத்து அமைத்துள்ளதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரே கழிவறைக்குள் இரண்டு டாய்லெட் கோப்பைகளை மிகவும் நெருக்கமாக வைத்து, அதுவும் இடையில் தடுப்புச்சுவர்கள்கூட இல்லாமல் அமைத்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறான கழிவறையைப் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.