பிக்பாஸ் டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் கமலிடம் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது என்பதற்கான டீசர் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் கமல் இடி மின்னலுடன் வந்து நிற்கின்றார். அவர் கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச்தான் விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு பரிசாக கொடுத்து விட்டார்.
அப்படி என்றால் அந்த டீசரில் இருக்கும் வாட்சை வாங்கினாரா? இல்லை சூர்யாவுக்கு பரிசளிக்கும் முன்பாக இந்த வீடியோவை எடுத்தார்களா? என தெரியவில்லையே என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் உண்மையைச் சொல்லுங்கள் என கூறியுள்ளார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டீசர் பார்த்த ரசிகர்கள் பலரும் கமலிடம் கேள்வி கேட்டு வருகின்றார்கள்.
#BiggBossTamil6 விரைவில். @vijaytelevision @disneyplusHSTam https://t.co/Ek2yf6CPkl
— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2022