Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடெல்லாம் பெருஞ்செயல் செய்வாய் வா, வா, வா…… ராகுலுக்கு ப.சி. ட்வீட்…!!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3570 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முதல்வர் மு க ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை அடுத்து 11 ஆம் தேதியன்று ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் பாதையாத்திரை மேற்கொள்கிறார். அங்கு 18 நாட்கள் தங்கி பாதயாத்திரை செல்கிறார். அதன்பிறகு கர்நாடக மாநிலம் சென்று அங்கு 21 நாட்கள் பாதயாத்திரை தொடங்குகிறார்.

இந்த நிலையில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை 2வது நாளாக இன்று குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கிய ராகுல், கொட்டாரம், வழுக்கம்பாறை வழியாக சுதீந்திரம் வரும் ராகுல் பிற்பகலில் எஸ்.எஸ்.எம்.பள்ளியில் தங்குகிறார். 2வது நடைபயணத்தையொட்டி, ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், “ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா, வா, வா”, இன்று தொடங்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பார்த அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என வேண்டுவோம் என ட்வீட் செய்துள்ளார்.

Categories

Tech |