இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இது தொடர்பாக பேசிய அவர், பூட்டப்பட்ட அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவிட்டு 30 நாள் வரைக்கும் யாரும் போகக்கூடாது, 30 நாள் கழித்து போகலாம் என்கின்ற முறையில் ஒரு தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து எங்களது கழக ஒருங்கிணைப்பாளர், தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈபிஎஸ் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி, முழுவதுமாக கேட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் முப்பது நாள் கழித்து இவர்கள் உள்ளே செல்லவும் இல்லை. 48வது நாள் இன்றைய தினம் இவர்கள் திடீரென உள்ளே செல்வது கண்டிக்கத்தக்கது.இப்படி செல்பவர்களால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும். ஈபிஎஸ் தரப்பை உள்ளே அனுமதித்தால், ஓபிஎஸ் தரப்பில் நாங்க போவோம் அப்படின்னு பிரச்சினைகள் எல்லாம் வரும். எனவே காவல்துறை சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எடப்பாடியை உள்ளே அனுமதிக்க கூடாது.
உச்சநீதிமன்ற வழக்கு அடுத்த வாரம் அல்ல இன்னும் பத்து நாட்களிலோ முடிவுக்கு வந்துவிடும். உச்சநீதிமன்ற முடிவு செய்யட்டும், உச்சநீதிமன்ற ஆணையை பெற்று பின்பு செல்லலாம் என்பது தான் எனது மனுவினுடைய சாராம்சம். அதைத்தான் நான் போலீஸிஸ் தலைவர் டிஜிபி அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அது மாத்திரமல்ல சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட பின்னால், சிபிசிஐடி விசாரணை நடக்கும்போது அங்கே சிவி சண்முகம் சிபிசிஐடி அங்கம் போல எல்லா வேலையும் மேற்கொள்கிறார்.
இதனால் ஆதாரம் என்ன வேண்டுமானாலும் மாற்றப்படலாம். அங்கு இருக்கின்ற ஆவணங்கள் இவர்கள் மூலமாக காணாமல் போகலாம், இருக்கின்ற கதவுகள் மீண்டும் உடைக்கப்படலாம் எவை எல்லாத்தையும் சிவி சண்முகம் செய்வார் என்பதில் எனக்கு எந்த வித மாற்று கருத்தும் இல்லை. ஆகவே சிபிசிஐடி இவரை எப்படி அனுமதிக்கிறது என்பதெல்லாம் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது. ஆகவே நான் புகாரை இன்றைய தினம் காவல்துறையிடம் அளித்திருக்கிறேன் என தெரிவித்தார்.